தனிநபர் பாதுகாப்பு கவசத்தின் தரம் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பின்னரே கொள்முதல் செய்யப்படுகிறது : மத்திய அரசு விளக்கம்
டெல்லி : தனிநபர் பாதுகாப்பு கவசத்தின் தரம் பற்றி ஊடகத்தில் வெளியானது குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.தனிநபர் பாதுகாப்பு கவசத்தின் தரம் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பின்னரே கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் குறைபாடு இருப்பது தெரியவந்தால் உரிய நிறுவனத்திடம் இருந்து பாதுகாப்பு கவசம் வாங்குவது நிறுத்தப்படுகிறது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தரத்தை முழுமையாக சோதனை செய்த பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமாக தனிநபர் பாதுகாப்பு கவசம், N95 முகக்கவசம் உற்பத்தி செய்யப்படுவதாக கூறிய மத்திய அரசு, மாநில, மத்திய அரசு நிறுவனங்களுக்கு இதுவரை 111.08 லட்சம் N95 முக கவசங்கள் வழங்கப்பட்டதையும் தெரிவித்துள்ளது.