http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__118251979351044.jpg

திருச்சியில் பணி மாறுதலை மது அருந்தி கொண்டாடிய 9 சிறைக்காவலர்கள் மீது வழக்குப்பதிவு

திருச்சி: திருச்சியில் பணியாற்றி வரும் சிறைக் காவலர்கள் 37 பேருக்கு விருப்பத்தின் பேரில் மதுரை, தேனிக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் சிலர் மது அருந்தியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் 3, 4 பேர் அமர்ந்தபடி  கூச்சலிட்டபடி குடியிருப்பு வளாகத்தில் சுற்றியுள்ளனர். இது குடியிருப்பு வாசிகளான சக சிறைக் காவலர்களின் குடும்பத்தினருக்கு இடையூறாக இருந்துள்ளது.

இது குறித்து குடியிருப்பு வாசிகளின் புகாரின்பேரில் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் சிறைக் காவலர்கள் 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பணிமாறுதல் செல்லும் நேரத்தில், உற்சாக மிகுதியால் நடந்த கொண்டாட்டமே அவர்களுக்கு  தலைவலியாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.