ஓ. பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி: நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி
by DINசென்னை: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை நேரில் சந்தித்த முதல்வர் பழனிசாமி நலம் விசாரித்தார்.
சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு முழு உடற் பரிசோதனை செய்யப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், வழக்கமான மருத்துவப் பரிசோதனை முடித்து இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, இன்று மதியம் 12 மணியளவில், மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் சென்றார்.
முன்னதாக இன்று காலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்த நிலையில், மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஞாயிற்றுக்கிழமை மாலையே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.