இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள போது அட்டகாசம் செய்த பாகிஸ்தான் பிரஜைகள்
by Vethu, Vethuஇலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் கடற்கரைக்கு வந்த பாகிஸ்தான் பிரஜைகளால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
மாத்தறை கடற்கரை வீதிக்கு திடீரென வந்த பாகிஸ்தான் நாட்டவர்கள் சிலரிடம் விசாரிக்க சென்ற போது குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
மோட்டார் வாகனத்தில் வந்த நபர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு முதலில் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்ட போது அவர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
மோட்டார் வாகனத்தில் வந்த நபர்களில் மூவரே முதலில் பொலிஸாருக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அதற்கமைய மேலதிக பொலிஸ் குழுக்களும் குறித்த இடத்திற்கு அழைக்கப்பட்ட போது தாம் பாகிஸ்தான் நாட்டு தூதரகத்தில் உள்ளவர்கள் எனவும், இராஜதந்திர உறவிற்கமைய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் மிகவும் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பாகிஸ்தான் நாட்டவர்கள் தங்கள் மோட்டார் வாகனத்தை பின்னோக்கி செலுத்த ஆரம்பித்துள்ளனர். இதன் போது பொலிஸாரின் வாகனம் ஒன்று கீழே விழுந்து சேதமடைந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் நாட்டவர்கள் சிலர் பொலிஸாருக்கு முன்பு சிகரெட் பற்ற வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மாத்தறை தலைமையக பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலர் பாகிஸ்தான் நாட்டவர்களுடன் உரையாடியுள்ளனர்.
பின்னர் வேறு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் குறித்த பாகிஸ்தான் நாட்டவர்களின் அடையாளத்தை உறுதி செய்து சாரதி அனுமதி பத்திரத்தை சமர்ப்பித்து அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றுள்ளர்.
சம்பவத்தை பதிவிட சென்ற ஊடகவியலாளர்களுக்கும் குறித்த பாகிஸ்தான் நாட்டவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.