ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மகேஷ் பாபு – மின்முரசு
தெலுங்கு சினிமா உலகில் உச்ச நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரசின் தாக்கமும் அதன் காரணமாக நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை ரொம்பவும் பாதித்துள்ளன. இந்தநிலையில் தற்போதுதான் ஊரடங்கு விதிகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு மக்கள் வெளியில் நடமாட ஆரம்பித்துள்ளார்கள்.
அவ்வாறு விதிமுறைகள் ஓரளவு தளர்த்தப்பட்டாலும் மாஸ்க் அணிவதை மறக்கவே கூடாது என வலியுறுத்தியுள்ளார் நடிகர் மகேஷ்பாபு.
அவர் கூறியதாவது ’இப்போது தான் மெதுவாக வெளிவர தொடங்கியுள்ளோம். ஆனால் நிச்சயமாக இந்த சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமான ஒன்று. ஒவ்வொரு முறை வெளியே போகும் போதும் மாஸ்க் அணிய மறக்காதீர்கள்’ இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related Tags :
Source: Malai Malar
murugan
Post navigation
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 17,082பிரபல இயக்குனர் படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
Related Posts

பயமும், ஊரடங்கும் தேவை இல்லாதது – மன்சூரலிகான்
murugan May 26, 2020 0 comment

இவரை என்னால் ஒருமுறை கூட அவுட்டாக்க முடியவில்லை: சோயிப் அக்தர்
Ilayaraja May 26, 2020 0 comment
