https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/2/17/11/original/Trichyairportfront.jpg

திருச்சி மற்றும் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு இன்று இயக்கவிருந்த விமானங்கள் ரத்து

by

கரோனா பொது முடக்க இடைவெளியை அடுத்து திருச்சி - சென்னை இடையே திங்கள் கிழமை முதல் இயக்குவதாக இருந்த (உள்நாட்டு) விமான சேவைகள் ரத்து திடீரென செய்யப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் சாலை, ரயில், விமானப் போக்குவரத்து கடந்த 60 நாட்களாக முடக்கப்பட்டிருந்தது. பின்னர் பொதுக் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (மே 25) முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது.
  
இதையடுத்து, திருச்சியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இன்று முதல் விமான சேவை இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 

அவை குறித்த அட்டவணையும் வெளியிடப்பட்டது.
பயணச்சீட்டு முன்பதிவுகளும் நடைபெற்றன. விமான நிலையத்திலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தன. ஆனால், காலை சென்னையிலிருந்து வர வேண்டிய விமானம் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை. திருச்சி - பெங்களூர் சேவை குறித்து மாலை தெரிய வரும்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக திருச்சி - சென்னை இடையேயான விமான சேவை மே 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 முன்னதாக, இதே காரணத்துக்காக மே 31-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு  விமானங்களை இயக்க வேண்டாம் என, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல், தூத்துக்குடி கரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதை முன்னிட்டு தூத்துக்குடியிலிருந்து இன்று சென்னை செல்ல இருந்த விமானம் ரத்து .
விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 

இந்த விமானத்திற்கு 38 பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.