https://s3.amazonaws.com/adaderanatamil/1590394382-IMG-20200525-WA0005.jpg

திருமண வைபவங்கள் 100 பேருக்கு உட்பட்டதாக வரையறுக்கப்பட வேண்டும்

திருமண வைபவங்களை ஏற்பாடு செய்யும் பொழுது அதற்கென திருமணம் நடைபெறும் பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியை பெறவேண்டும்.

திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை  Invitees 100 பேருக்கு வரையறுக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திருமண வைபவம் மற்றும் அனைத்து வைபவங்களும் சுகாதார அமைச்சின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கு அமைவாகவே நடைபெற வேண்டும் என்று சுகாதார அமைசசின் சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

வைபவங்களின் போது முககவசம் அணிவதும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)