தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 நாட்களாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை
சென்னை : தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 நாட்களாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில், ரூ.61 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அத்துடன் கூடுதலாக இன்னொரு ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டால், இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த முடியும்.அதன் மூலம் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்க முடியும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். எனவே, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 நாட்களாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்; இக்கோரிக்கையை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்', இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.