http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__836513698101044.jpg

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தனி ஆணையம் அமைக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு

லக்னோ: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஊரடங்கு உத்தரவால் சிக்கி தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தனி ஆணையத்தை ஏற்படுத்த உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இதுகுறித்து அந்த மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவனீஷ் அவஸ்தி விடுத்துள்ள அறிக்கையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்காகவும், மாநிலத்திலும் இடம்பெயர்வு ஆணையம் அமைக்க முடிவு செய்துள்ளதாகக் தகவல் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் துன்பங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநில தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க கூடுதல் பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகளை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாநில அரசின் முயற்சியால், இதுவரை 23 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வெளிமாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், இதனால் அவர்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படுவதாகவும், அவர்களுக்கு வேலை பாதுகாப்பு கிடைக்கும் வகையில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.