எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் செல்ல அச்சம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

by

மக்களுக்கு மத்தியில் செல்ல முடியாத அச்சம் காரணமாகவே சுகாதார வழிக்காட்டல்களை கடைபிடித்து கூட பொதுத் தேர்தலை நடத்த முடியாது என கூறுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

முடிந்தவரை தேர்தலை ஒத்திவைக்கும் தேவையே எதிர்க்கட்சிகளுக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கம்பஹா மினுவங்கொடை உடுகம்பளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனநாயகத்தை மதித்தால், சுகாதார வழிக்காட்டல்களை கடைபிடித்து எப்படி தேர்தலை நடத்துவது என்பதை நாம் ஆராய வேண்டும்.

தேர்தலை நடத்தாமல் இருப்பது குறித்து சிந்திக்கக் கூடாது. தேர்தலை நடத்தலாம் என சுகாதார அதிகாரிகள் கூட தெரிவித்துள்ளனர்.

https://img.zoftcdn.com/com/files/2020/01/safe.png

சுகாதார வழிக்காட்டல்களை கையாண்டு தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துக்களை தேர்தல் ஆணைக்குழுக் கூட கேட்டுள்ளது. வாக்கெடுப்பு நிலையத்திற்கு ஒரு தடவையில் ஒருவர் மாத்திரமே செல்ல முடியும். இதனால், வாக்குச் சாவடிகளில் ஒரு மீற்றர் இடைவெளியை பாதுகாப்பது பிரச்சினையல்ல.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய எதிர்சக்திகளுக்கு தேர்தலை ஒத்திவைக்கும் தேவையே உள்ளது.

மக்களுக்கு மத்தியில் இவர்களால் செல்ல முடியாது என்பதே இதற்கு காரணம். ஏதாவது ஒரு தடையை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர். நல்லாட்சி அரசாங்கம் பதவியில் இருக்கும் வரை தேர்தல்களை ஒத்திவைத்தது.

ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணிக்கு போன்று தேர்தல் அச்சமே சஜித் உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கும் இருக்கின்றது எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.