பிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் – அமலாபால் – மின்முரசு

பிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் என்று நடிகை அமலாபால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கினால் நடிகர், நடிகைகள் வீட்டில் முடங்கி உள்ளனர். ஓய்வு நேரத்தை செல்லப்பிராணிகளை கொஞ்சுதல், உடற்பயிற்சி, சமையல் செய்தல், புத்தகம் படித்தல், நடனம் கற்றல், ஓவியம் வரைதல் என்று கழிக்கின்றனர். கொரோனாவில் இருந்து தப்பிக்க சமூக விலகலை கடைபிடிக்கும்படி பேசி வீடியோவும் வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் அமலாபால் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இந்த ஊரடங்கில் புதிதாக எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அதற்காக வருத்தப்பட வேண்டாம்.

வாழ்க்கை என்றாலே போட்டி பந்தயம் என்று நினைக்கும் மனோபாவத்தில் இருந்து மாற வேண்டும். பிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள். இந்த ஊரடங்கு காலத்தில் புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றோ, புத்தகங்கள் படிக்கவில்லை என்றோ வருத்தப்பட வேண்டாம். இது கற்றுக்கொள்வதற்கான நேரமோ அல்லது உற்பத்தியை பெருக்குவதற்கான நேரமோ இல்லை. அமைதியாக இருங்கள். ஒருவர் செய்வதை நாமும் செய்ய வேண்டும் என்று அவர் பின்னால் ஓட வேண்டிய தேவை இல்லை.”

இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

ஜப்பானில் பேஸ்பால் லீக் ஜூன் 19-ந்தேதி தொடக்கம்டெல்லியில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: குழப்பத்தால் பயணிகள் கடும் அவதி

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005261050068732_1_201805111650545828_Vijay-Antony-turns-Thirudan-in-his-next_SECVPF._L_styvpf.jpg

லாக்டவுனில் புதிய அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி

murugan May 26, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005261029168613_Tamil_News_Too-old-for-selectors-says-Harbhajan-Singh-about-his_SECVPF.gif

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தயார் – சீனியர் சுழற்பந்து வீரர் விருப்பம்

Ilayaraja May 26, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005261015241822_Tamil_News_Misbah-ul-Haq-says-The-postponement-of-the-20-over-World-Cup_SECVPF.gif

20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைப்பதில் அவசரம் காட்டக்கூடாது – மிஸ்பா உல்-ஹக்

Ilayaraja May 26, 2020 0 comment