ஜப்பானில் பேஸ்பால் லீக் ஜூன் 19-ந்தேதி தொடக்கம் – மின்முரசு
ஜப்பானில் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட பேஸ்பால் லீக் ஜூன் 19-ந்தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் ஆண்டுதோறும் பேஸ்பால் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் மார்ச் மாதம் 20-ந்தேதி லீக் தொடங்க இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக லீக் தள்ளி வைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஏப்ரல் மாதத்தில் இருந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் தடைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. விளையாட்டு போட்டிகளை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் ஜூன் 19-ந்தேதி ரசிகர்கள் இன்று பேஸ்பால் லீக் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19-ந்தேதி போட்டிகள் தொடங்கினால், ஜப்பானில் தொடங்கப்படும் முதல் தொழில்முறை போட்டி இதுவாகத்தான் இருக்கும்.
இந்த லீக்கில் விளையாடும் பெரும்பாலான அணிகள் பயிற்சியை தொடங்கியுள்ளன.
Related Tags :
Source: Maalaimalar
Ilayaraja
Post navigation
சிங்கம்பட்டி ராஜா மறைவு – சிவகார்த்திகேயன் இரங்கல்பிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் – அமலாபால்
Related Posts

நடிகை ராசி கண்ணாவுக்கு இப்படி ஒரு திறமையா? – மிகுதியாகப் பகிரப்படும் காணொளி
murugan May 26, 2020 0 comment

கைதியால் வந்த வினை… தனிமையில் இருக்க மலையாள நடிகருக்கு அதிகாரிகள் உத்தரவு
murugan May 26, 2020 0 comment
