http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__470150172710419.jpg

கிண்டி, அம்பத்தூர் உட்பட17 தொழிற்பேட்டைகள் 25% பணியாளர்களுடன் இன்று முதல் செயல்பட தொடங்கின

சென்னை : சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட தமிழகம் முழுவதும் 17 தொழிற்பேட்டைகள் இன்று முதல் செயல்பட தொடங்கின. கிண்டி தொழிற்பேட்டையில் ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே செயல்படத் தொடங்கி உள்ளன.25% பணியாளர்களுடன் நிறுவனங்கள் செயல்பட தொடங்கி உள்ளன.பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தொழிற்பேட்டைகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.