துணை முதல்வர் ஓபிஎஸ் திடீரென மருத்துவமனையில் அனுமதி; மதியம் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரிக்கிறார் முதல்வர் பழனிசாமி
சென்னை: வழக்கமான பரிசோதனைக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பரிசோதனை முடிந்து ஓ.பன்னீர்செல்வம் மாலை வீடு திரும்புவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கவுள்ளார். அப்போது, முதல்வருடன் தமிழக அமைச்சர்களும் சென்று உடல்நலம் விசாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.