https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/27/original/america102307.jpg

அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது!

by

நியூயார்க்: உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்காவில் பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அந்த நாட்டு மக்களிடையே பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகளவில் கரோனா தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 55,02,606 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பலி எண்ணிக்கையும் 3,46,761 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், வல்லரசு நாடான அமெரிக்காவில் கரோனா அதிகளவில் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. உலக நாடுகள் கரோனா தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்காவை ஆட்டிப் படைக்கிறது கரோனா. 

அங்கு இதுவரை, கரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 99,300 ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,686,445 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் 4,51,702 பேர் நோயிலிருந்து இதுவரை மீண்டுள்ளனர்.