https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/ravi1.jpg

செல்ல நாய்களுடனான ரவி சாஸ்திரியின் சமூக இடைவெளிக் கூட்டம்: ரசிகர்களின் மனத்தை அள்ளிய புகைப்படங்கள்

by

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் மீண்டும் தொடங்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளைச் சமீபத்தில் வெளியிட்டது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). மைதானத்தில் நடுவர்களும் வீரர்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும். பயிற்சியின்போதும் சமூக இடைவெளியை வீரர்கள் பின்பற்றவேண்டும். இரு வீரர்களுக்கு இடையே 1.5 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய செல்ல நாய்களுடன் விளையாடியபோது எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. தகுந்த இடைவெளி விட்டு நாய்களுடன் விளையாடும் புகைப்படங்களைப் பகிர்ந்த ரவி சாஸ்திரி கூறியதாவது:

ஐசிசி கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்க சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் (நாய்களை) கடுமையாகக் கண்டித்தேன். தூறலுக்குப் பிறகு கூட்டத்தைத் தவிர்த்துவிட்டு, ஆடுகளத்தை கேப்டன் பார்வையிட்டார் என தனது நாய்களைக் கொண்டு வேடிக்கையான ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துள்ளார்கள்.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/5/25/ravi2.jpg