https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/11/original/Chennai_Coronavirus_EPS_2.jpg

சென்னையில் கரோனா பாதிப்பு 10,576-ஆக அதிகரிப்பு: 5 மண்டலங்களில் ஆயிரத்தை எட்டியது

by

சென்னையில், நேற்று ஒரே நாளில் 587 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 10,576-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய ராயபுரம், திருவிகநகர், கோடம்பாக்கத்துடன் புதிதாக தண்டையார்பேட்டை,தேனாம்பேட்டை மண்டலங்களும் இணைந்துள்ளன.

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மே 24) 587 பேருக்கு, கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 10,576-ஆக உயா்ந்துள்ளது.

இன்று காலை 8 மணி வரையிலான புள்ளிவிவரப்படி, ராயபுரம் மண்டலத்தில் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதன்படி, அந்த மண்டலத்தில், 1,981 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,460 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.  திருவிகநகர் பகுதியில் 1188 பேருக்கும், தேனாம்பேட்டையில் 1118 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 1044 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதே போல், 4,844 போ் குணமடைந்துள்ளனா். 78 போ் உயிரிழந்துள்ளனா். 5,633 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.