உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்தைக் கடந்தது
by DINஉலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று பல்வேறு நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.
இந்நிலையில், உலகம் அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 55,02,590 ஆக உள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,02,469 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 3,46,761 பேர் பலியாகியுள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரில் 53,223 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் 2 ஆம் இடத்திலும், ரஷியா 3 ஆம் இடத்திலும், ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் முறையே 4 ஆம் மற்றும் 5 ஆம் இடத்தில் உள்ளன.
கரோனா பாதிப்பில் இந்தியா 10 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.