இந்து கல்லூரி முன்னுதாரணம்?
by டாம்போ![https://1.bp.blogspot.com/-0tfqWItn0Y4/XsuwTrTfFYI/AAAAAAAAQnw/worYEuuXwiYS2Y06paiSJi1DiZpTW48JwCNcBGAsYHQ/s1600/hi.jpg https://1.bp.blogspot.com/-0tfqWItn0Y4/XsuwTrTfFYI/AAAAAAAAQnw/worYEuuXwiYS2Y06paiSJi1DiZpTW48JwCNcBGAsYHQ/s1600/hi.jpg](https://1.bp.blogspot.com/-0tfqWItn0Y4/XsuwTrTfFYI/AAAAAAAAQnw/worYEuuXwiYS2Y06paiSJi1DiZpTW48JwCNcBGAsYHQ/s1600/hi.jpg)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் சாதாரண தர, உயர்தர மாணவர்களில் நிகழ்நிலைக் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான மடிக்கணினி (லப்ரொப்), வரைபட்டிகை(ரப்லெட்), திறன்பேசி (ஸ்மார்ட் போன்) வசதிகளைக் கொண்டிராத – வசதி குறைந்த மாணவர்களுக்கு ரப்லெட் கணினிகளை வழங்குவதற்கு கல்லூரியின் முதல்வர் இரட்ணம் செந்தில்மாறன் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
கல்லூரி முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானியக் கிளையின் நிதி அனுசரணையில், ரூபா 1.2 மில்லியன் பெறுமதியான 60 ரப்லெட் கணினிகள் (வரைபட்டிகைகள் ) பாடசாலைக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
கற்றல் நடவடிக்கைக்கு மட்டும் பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பு அம்சங்களுடன், கற்றல் காணொலிகள், செயலட்டைகள் மற்றும் மின் நூல்கள் என்பன பதிவேற்றப்பட்டு, பொருளாதார நிலையில் பின் தங்கிய, உயர்தர மற்றும் சாதரண தர மாணவர்களுக்கு இரவலாக வழங்கப்படவுள்ளதுடன், ரப்லெட் கணினிகளுக்குத் தேவையான இணைய இணைப்பு வசதிகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.