தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
by Ajith, Mayuriமாகாணங்களுக்கு இடையிலான சேவைகளில் ஈடுபடவுள்ள பேருந்துகளை கொழும்புக்குள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்புக்குள் பிரவேசிக்காது நடத்தப்படும் பேருந்து சேவைகள் யதார்த்தமற்றவை, நடைமுறைக்கு சாத்திமயற்றது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனதலைவர் கெமுன விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாளை மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும்.
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையின் போது கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்க்கப்படும்.
அதேநேரம் தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வுகள் காணப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்