நாளை முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை

by

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டவுடன் நாளை முதல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பிரதி பொலிஸ்மா அதிபா அஜித் ரோஹன இதனை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

வரிசையில் நிற்கும்போது அல்லது பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனையை வழங்க சட்டத்தில் இடமுண்டு என்றும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பேருந்துகளில் நாளை முதல் ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகள் ஏற்றப்படுவர் என போக்குவரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்வோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.