நாளை முதல் 2 விசேட தொடரூந்துகள் உட்பட 27 தொடரூந்துகள் சேவையில்

by

நாளை முதல் 2 விசேட தொடரூந்துகள் உட்பட 27 தொடரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இவற்றில் பயணம் செய்வதற்காக 16ஆயிரத்து 600 அரச மற்றும் தனியார் பணியாளர்கள் தம்மை பதிவுசெய்துள்ளார்கள் என்று தொடரூந்து திணைக்கள வர்த்தக அத்தியட்சகர் வஜிர பொல்வத்த தெரிவித்துள்ளார்.

இரண்டு விசேட தொடரூந்துகள் நாளை காலை கண்டியில் இருந்து பெலியத்த வரையில் சேவையில் ஈடுபடவுள்ளன.

கண்டி, ரம்புக்கனை, பொல்கஹவல, மீரிகம, ராகம,மாஹோ,சிலாபம், நீர்கொழும்பு,பெலியத்த, காலி, மொரட்டுவ, அவிசாவளை, கொஸ்கம, பாதுக்க, ஹோமாகம, கொட்டாவ ஆகிய இடங்களில் இருந்து தலா ஒரு தொடரூந்து புறப்படும்.

கம்பஹா, அலும்கம, களுத்துறை ஆகிய இடங்களில் இருந்து தலா இரண்டு தொடரூந்துகள் புறப்படும். வெயாங்கொடையில் இருந்து மூன்று தொடரூந்துகள் புறப்படும்.

எனவே பதிவுசெய்துக்கொண்ட பயணிகள் அனுமதிசீட்டுக்களை ஒதுக்கிக்கொள்வதற்காக நேரத்துக்கு வருமாறு கோரப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தொழில் அடையாள அட்டைகளை கொண்டிருக்கின்றவர்களுக்கு மாத்திரமே அனுமதிச் சீட்டுக்கள் வழங்கப்படும் என்று தொடரூந்து திணைக்கள வர்த்தக அத்தியட்சகர் வஜிர பொல்வத்த தெரிவித்துள்ளார்.