![https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/14/original/amitab122.jpeg https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/14/original/amitab122.jpeg](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/14/original/amitab122.jpeg)
அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் அமிதாப் பச்சன் படம்: டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு
by DINகரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதுமே மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.
அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் உருவான குலாபோ சிதாபோ (Gulabo Sitabo) படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12 முதல் அமேசானில் குலாபோ சிதாபோ வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யூடியூப் டிரெண்டிங்கில் முன்னணியில் உள்ளது. இதனால் அமேசான் பிரைமில் படம் வெளியாகும்போது மேலும் அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.