ஹட்டனில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி
by Ajith, Benatஹட்டன் டிக்கோயா பெருந்தோட்டத்தில் இன்று குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண் ஒருவர் மரணமானார்.
இவர் ஹட்டனை சேர்ந்த 50 வயதானவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சம்பவத்தின்போது 8 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.