வெளிநாட்டு விமான நிலையமொன்றில் கைவிடப்பட்ட நிலையில் இலங்கையர்கள்

by

இலங்கையர்கள் பலர் ரோமானிய விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோமானியாவின், பொட்டோசனி என்ற இடத்தில் பணியாற்றிய 36 இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பியனுப்புவதாக கூறி உள்ளூர் அதிகாரிகள் அழைத்துவந்துள்ளனர்.

இருந்த போதும் அவர்களை அனுப்புவதற்கு உரிய விமான சேவைகள் இருக்கவில்லை என தெரியவருகிறது.

இதனையடுத்து அவர்கள் விமான நிலையத்திலேயே கைவிடப்பட்ட நிலைக்கு ஆளாகியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இவர்கள் ஏற்கனவே இலங்கைக்கு அனுப்பப்படுவதற்காக மூன்று வாரங்களாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை விமானநிலையத்தில் இலங்கையர்கள் 26பேருக்கும் குடிநீரைக்கூட ரோமானிய அதிகாரிகள் உரிய நேரத்தில் வழங்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரோமானியாவில் 43 இலங்கையர்கள் தொழிற்சாலை உரிமையாளர்களின் மெய்பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.