கேகாலையில் கட்டுப்பாட்டிற்குள் கொரோனா! 479 பேருக்கு எலி காய்ச்சல் - ஒருவர் பலி

by

கொரோனா வைரஸ் சந்தேகத்தில் கேகாலை மாவட்டத்தில் 91 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை 2890 பேருக்கு சுய தனிமைப்படுத்தல் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட கொரோனா தொற்று ஒழிப்பு விசேட வைத்திய நிபுணர் சுஜீவ பண்டார தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்ட கொரோனா ஒழிப்பு விசேட கூட்டம் சப்ரகமுவ ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற போதே இந்த தகவல் வெளியிடப்பட்டது.

இதேவேளை கேகாலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பராவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கேகாலை மாவட்ட சுகாதார பணிப்பாளர் குமார் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்டத்தில் இதுவரை 479 பேருக்கு எலி காய்ச்சல் பரவி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒருவர் மரணத்தை தழுவியுள்ளார்.

அத்தோடு கேகாலை மாவட்டத்தில் 463 பேருக்கு டெங்கு நோய் பரவி உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

எலி காய்ச்சல் மற்றும் டெங்கு நோயாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் குமார் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.