மறுதயாரிப்பு படத்தில் சசிகுமாருடன் இணையும் ஆர்யா? – மின்முரசு
தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யாவும், சசிகுமாரும் ரீமேக் படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம்” என்று கூறப்படும் கேரள மண்ணில் தயாரான சில படங்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில், ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற புதிய மலையாள படம், சமீபத்தில் திரைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு படம் இனிமேல் வருமா? என்ற எதிர்பார்ப்பை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கிறது. அதைத்தொடர்ந்து ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் வாங்கியிருக்கிறார். இப்படத்தில் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தில் சசிகுமார், ஆர்யா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிருத்விராஜ் வேடத்தில் ஆர்யாவும், பிஜூமேனன் வேடத்தில் சசிகுமாரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Source: Malai Malar
murugan
Post navigation
கேஜிஎப் 2-ம் பாகத்தின் முக்கிய அப்டேட்பிசிசிஐ தலைவராக கங்குலி நீடிக்க முடியாது: மத்திய பிரதேச மாநில உறுப்பினர் போர்க்கொடி
Related Posts
வெப் தொடர் வாய்ப்புகளை நிராகரித்தது ஏன்? – கே.எஸ்.ரவிக்குமார் விளக்கம்
murugan May 26, 2020 0 comment
சந்திரமுகி ஆகும் சிம்ரன்?
murugan May 26, 2020 0 comment