மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2,118 கன அடியில் இருந்து 1,889 கன அடியாக குறைவு
சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2,118 கன அடியில் இருந்து 1,889 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் 100.43 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 65.40 டிஎம்சியாக உள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.