ஊரடங்கு சட்டத்தை மீறியமைக்காக இன்று வரை 64 387 பேர் கைது
by Ajith, Mayuriகொரோனா கட்டுப்பாட்டு ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்ட காலத்தில் இருந்து அதனை மீறியமைக்காக இன்று வரை 64 387 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மார்ச் 20ஆம் திகதி முதல் இதுவரை 18 169 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 1710 பேர் ஊரடங்கை மீறியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 557 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கிடையில் 20 497 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 7 934 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.