வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் திடீர் மரணம்
by Vethu, Vethuவெளிநாட்டிலிருந்து பெண்ணொருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த பயாகலையை சேர்ந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
குவைத்தில் இருந்து நாடு திரும்பி நிலையில் குறித்த பெண் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் இன்று அதிகாலை திடீரென சுகயீனம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்ததாக சீனக்குடா பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவருடன் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய இரு பெண்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.