கேஜிஎப் 2-ம் பாகத்தின் முக்கிய அப்டேட் – மின்முரசு

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், சஞ்சய் தத் நடிப்பில் உருவாகி வரும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் ‘கே.ஜி.எப்’ . யஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரஷாந்த் நீல் இயக்கிய இந்த படத்தின்  2-ம் பாகம் தயாரிப்பில் இருக்கிறது. 2-ம் பாகத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் யாஷுடன் நடித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதே தேதியில் வெளியீடு சாத்தியமா என்பது விரைவில் தெரியவரும். இதற்கிடையே இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையவில்லை. இன்னும் எவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு என்று விசாரித்தபோது, 25 நாட்கள் படப்பிடிப்பு இன்னும் இருக்கிறது. 

அதில் 2 சண்டைக் காட்சிகளைப் படமாக்கவுள்ளது படக்குழு. அதில் சஞ்சய் தத் இடம்பெறும் சண்டைக்காட்சியும் ஒன்று. இந்த சண்டைக் காட்சிகள் தவிர்த்து, மீதமுள்ள அனைத்துக் காட்சிகளும் பின்னணி இசைக் கோர்ப்பு உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 23-ம் தேதி வெளியிட்டுவிட வேண்டும் என்று படக்குழு தீவிரமாக இருக்கிறது.

Related Tags :

Source: Malai Malar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்படாதா? #BBCRealityCheckமறுதயாரிப்பு படத்தில் சசிகுமாருடன் இணையும் ஆர்யா?

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005260832169919_1_201803030414533457_Anushka-Sharma-Pari-banned-in-Pakistan_SECVPF._L_styvpf.jpg

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் அனுஷ்கா சர்மா – குறிப்பிட்ட இனத்தவரை இழிவுபடுத்தியதாக புகார்

murugan May 26, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005260900134567_Tamil_News_CM-Edappadi-Palaniswami-Consult-about-School-opening_SECVPF.gif

பள்ளிகள் திறப்பு எப்போது?- முதலமைச்சர் இன்று ஆலோசனை

murugan May 26, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005260743013390_1_jhdhdeq._L_styvpf.jpg

கள்ளக்காதலை ஊக்குவிப்பதா? – கவுதம் மேனன் குறும்படத்திற்கு எதிர்ப்பு

murugan May 26, 2020 0 comment