Whatsapp இல் 50 நபர் வீடியோ கால் அழைப்பு செய்வது எப்படி? புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம்!
by Sharath Chandarபேஸ்புக் நிறுவனம், கடந்த மாதம் பேஸ்புக் மெசஞ்சர் பயன்பாட்டிற்கான புதிய மெசஞ்சர் ரூம்ஸ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த புதிய அம்சம் ஒரே நேரத்தில் சுமார் 50 நபர்களுடன் வீடியோ அழைப்பை மேற்கொள்ள அனுமதிக்கிறது. அதுவும் பயனர்கள் அந்தந்த பயன்பாடுகளை விட்டு வெளியேறாமல் நேரடியாக வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.

புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம்
இந்த புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான பீட்டா பதிப்பில் தற்பொழுது வெளியாகி பயன்பாட்டிற்குக் கிடைக்கிறது. இப்போது, வாட்ஸ்அப் அண்ட்ராய்டு பயனர்கள் இந்த அம்சத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை வாட்ஸ்அப் நிறுவனம் அதன் கேள்வி மற்றும் பதில் பிரிவில் விளக்கமாக விளக்கியுள்ளது. மெசஞ்சர் ரூம் இல் எப்படி சாட்டிங் அறையை உருவாக்குவது, அதில் எப்படி உங்கள் நண்பர்களை இணைப்பது என்று பார்க்கலாம்.

வாட்ஸ்அப் இல் 50 நபருக்கான வீடியோ கால் அழைப்பு வசதி
WABetaInfo இன் அறிக்கையின்படி, பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் பீட்டா 2.20.163 வெர்ஷனில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்தை வாட்ஸ்அப் தளத்தில் ஒருங்கிணைத்துள்ளது. இந்த புதிய அப்டேட் சாட் மெனுவில் உள்ள ஷேர் ஆப்ஷனுக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய "மெசஞ்சர் ரூம்ஸ்" விருப்பம் கேலரி மற்றும் டாக்குமெண்ட் ஆப்ஷன்களுக்கு மத்தியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

விலை ரூ.11,700: 43-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! சியோமி மீண்டும் அதிரடி.!

50 நபர்களுடன் ஒரே சாட் ரூம்
மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் ஒரே நேரத்தில் 50 நபர்களுடன் குரூப் வீடியோ அழைப்பைப் பயன்படுத்த ஒரு சாட் ரூம் அறையை உருவாக்க மெசஞ்சருக்கு உங்களை வழிநடத்துகிறது. இதுமட்டுமின்றி, மெசஞ்சர் ரூம்ஸ் அறையை உருவாக்குவதற்கான ஷார்ட்கட் ஆப்ஷன்கள், கால்ஸ் டேப் போன்ற வாட்ஸ்அப்பின் பிற பகுதிகளிலும் காணப்படுவதை WABetaInfo அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

கேமரா விருப்பத்தை மாற்றி மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம்
புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் இப்பொழுது உங்கள் வாட்ஸ்அப் சாட் ஷேர் ஆப்ஷனிற்குள் இருக்கும் கேமரா விருப்பத்தை மாற்றி அமைத்துள்ளது. கேமரா விருப்பம் எப்பொழுதும் போல உங்கள் சாட் பாக்ஸ் கீழ் இடத்தில் காணப்படுகிறது. நீங்கள் மெசஞ்சர் ரூம்ஸ் விருப்பத்தை கிளிக் செய்தால், இந்த அம்சம் என்ன என்பதை விளக்கும் அறிமுகத்தை வாட்ஸ்அப் வழங்குகிறது.

புதிய வீடியோ காலிங் அறையை எப்படி உருவாக்கலாம்?
வாட்ஸ்அப் பயன்பாட்டில், 50 நபர்களுக்கான குரூப் வீடியோ காலிங் அம்சத்தைத் தடையின்றி பயன்படுத்த விரும்பும் பயனர்கள் மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்தை எப்படிச் சரியாகப் பயன்படுத்தலாம் என்று இப்பொழுது பார்க்கலாம். புதிய வீடியோ காலிங் அறையை உருவாக்க விரும்பும் பயனர்கள் கீழே குறிப்பிட்டுள்ள முறையைப் பின்பற்றுங்கள்.

ஒரு வினாடியில் 1000 திரைப்படம் டவுன்லோட் செய்யலாம் - புதிய அதிவேக இன்டர்நெட்!

இதை செய்யுங்கள்
- முதலில் வாட்ஸ்அப் ஓபன் செய்து பின்னர் கால்ஸ் என்ற அழைப்பு டேப் பிரிவிற்குச் செல்லுங்கள்.
- கால் டேப் இல் உள்ள Create a Room விருப்பத்தை ஒரு முறை கிளிக் செய்தால் உங்களுக்கான சாட் ரூம் உருவாக்கப்படும்.
- அல்லது தனிப்பட்ட காண்டாக்ட் நபரின் சாட் டேப் சென்றும் புதிய மெசஞ்சர் ரூம் உருவாக்கலாம்.
- தனிப்பட்ட நபரின் சாட் பாக்சில் கீழ் மூலையில் உள்ள பேப்பர் கிளிப் பட்டனை அழுத்தி> மெசஞ்சர் ரூம்ஸ் ஐகானை தட்டவும்.

பாப் அப் விருப்பம்
- பாப் அப் விருப்பத்தில் Continue in Messenger விருப்பத்தை கிளிக் செய்யவும். பிறகு Try It கிளிக் செய்யுங்கள்.
- இப்போது சாட் ரூம்ஸ் அறையை உருவாக்க Create Room As என்று ஆப்ஷனை கிளிக் செய்து அறையின் பெயரைப் பதிவிடுங்கள்.
- அடுத்து, Send Link on WhatsApp அளிக்கச் செய்யவும்.

சாட்டிங் ரூம் லிங்க்
- இப்போது அறை லிங்கை பகிரத் தொடர்புகள் அல்லது குரூப் சாட்களைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர் திரையில் உள்ள அம்புக்குறியைத் தட்டவும்.
- Send என்ற பட்டனை அழுத்தி உங்கள் வீடியோ அழைப்பிற்கான லிங்கை அனைவருக்கும் அனுப்பலாம்.

விரைவில் அனைத்து பயனர்களுக்கும்
வாட்ஸ்அப் நிறுவனம் அதன் முக்கிய பயன்பாட்டில் இந்த அம்சத்தை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் தற்பொழுது பீட்டா வாட்ஸ்அப் பயன்பாட்டில் மட்டும் பயனர்களின் செயல்பாட்டிற்குக் கிடைக்கிறது. இந்த புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Most Read Articles

Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது! புதிய நகரங்களின் பட்டியல் இதோ!

வாட்ஸ்அப் செயலியில் பயனுள்ள வசதி அறிமுகம்.! என்ன தெரியுமா?

365நாட்கள் வேலிடிட்டி கொண்ட சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.!

சும்மா புகுந்து விளையாடலாம்: இனி whatsapp status-க்கு அந்த பிரச்சனை இல்லை!

வல்லவனுக்கு வல்லவன்: டிக்டாக்கை ஓரங்கட்டும் இந்திய செயலி மிட்ரான்., 50 லட்சத்தைக் கடக்கும் டவுன்லோட்

Whatsapp இல் 50 நபர் வீடியோ காலிங் அம்சத்திற்கான விருப்பம் அறிமுகம்! எப்படிப் பயன்படுத்துவது?

மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!

Whatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?

போன்லாம் வேண்டாம்: whatsapp மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்., டிராக்கிங் வசதியும் இருக்கு!

இனி இதன் ஆதிக்கம் தான்: மே மாத இறுதிக்குகள் களமிறங்கும் whatsapp pay?

8ஜிபி ரேம் உடன் புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

செல்போனுக்கு தாலிக் கட்டிய மாப்பிள்ளை., தனக்கு தானே தாலிக் கட்டிய மணப்பெண்: வீடியோகால் திருமணம்!
Best Mobiles in India

சாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G
92,999

ரியல்மி 6 ப்ரோ
17,999

ரியல்மி X50 ப்ரோ 5G
39,999

ஒப்போ ரெனோ3 ப்ரோ
29,400

iQOO 3
38,990

சாம்சங் கேலக்ஸி A71
29,999

போகோ X2
16,999

சாம்சங் கேலக்ஸி A51
23,999

ஒப்போ F15
18,170

விவோ V17
21,900

ரெட்மி நோட் 9 ப்ரோ
14,999

ரியல்மி 6 ப்ரோ
17,999

சாம்சங் கேலக்ஸி S10 லைட்
42,099

போகோ X2
16,999

சாம்சங் கேலக்ஸி A51
23,999

ரியல்மி X2 ப்ரோ
29,495

விவோ S1 ப்ரோ
18,580

ஆப்பிள்ஐபோன் 11
64,900

ஒன்பிளஸ் 7T
34,980

ஆப்பிள்ஐபோன் XR
45,900

டெக்னா கமோன் 15 Premier
17,999

ஹானர் 30 ப்ரோ பிளஸ்
54,153

லேனோவோ A7
7,000

எல்ஜி Style3
13,999

சாம்சங் கேலக்ஸி A71 5G
38,999

சாம்சங் கேலக்ஸி A51 5G
29,999

டிசிஎல் 10L
20,599

ஹானர் 30 ப்ரோ
43,250

ஹானர் 30
32,440

ஹானர் பிளே 4T ப்ரோ
16,190