சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடக்கம்
சென்னை: சென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. 61 நாட்களுக்கு பிறகு சென்னையில் இருந்து விமான சேவை தொடங்கியது. முதல் விமானம் சென்னையில் இருந்து காலை 6.40 மணிக்கு 111 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டது. முதல் விமானமாக இன்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பயணிகள்
கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று https://tnepass.tnega.org - பதிவு செய்து இ-பாஸ் பெறலாம்.