ஈழப்போராட்டத்தின் ஆதரவாளரும், இந்தியாவின் இறுதி மன்னருமான முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்
by Dias, Mayuriஈழப்போராட்டத்தின் ஆதரவாளரும், இந்தியாவின் இறுதி மன்னருமான நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் றி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி நேற்று காலமாகியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக முதுமையின் காரணமாக உடல் நலிவுற்றிருந்த நிலையில் நேற்றிரவு தனது 89ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரத்திலிருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் சிங்கம்பட்டி ஜமீன் அமைந்துள்ளது.
கி.பி. 1100 ஆம் ஆண்டில் உருவான இந்த சிங்கம்பட்டி ஜமீன், தமிழ்நாட்டில் 72 பாளையங்களில் ஒன்றாக இருந்தது.
காலம் காலமாக இருந்த அரசர் ஜமீன் முறை பின்னாளில் பாளையக்காரர்கள் என்று சொல்லப்படும் குறுநில அரசாக இருந்துள்ளது.
இவர்களின் அதிகாரம் வெள்ளையர் ஆட்சி காலத்திலும் தொடர்ந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950 களில் மன்னராட்சி முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டது.
அதற்கு சில வருடங்களுக்கு முன், சிறு வயதில் அதாவது மூன்று வயதிலேயே மன்னராக முடிசூட்டப்பட்டவர் முருகதாஸ் தீர்த்தபதி.
அதன் காரணமாகவே இந்தியாவில் முடிசூட்டப்பட்ட மன்னர்களில் இறுதி மன்னர் ஆவார்.
சிங்கம்பட்டி ஜமீனின் 31ஆவது பட்டத்திற்கான அரசரே றி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.