டட்லி சிறிசேனவின் அரிசி ஆலையும், நாங்கள் மொட்டுக்கட்சியில் வாக்கு கேட்பதும் இருவேறு விடயங்கள் - தயாசிறி

by

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேனவின் அரிசி வர்த்தகத்திற்கும், சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்பது இருவேறு விடயங்கள் என சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

டட்லி சிறிசேனவின் அரிசி உற்பத்தியும் நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது பௌத்த மதமும் மீன்பிடித் தொழிலும் போன்று இரண்டும் பொருந்தாத விடயங்கள்.

அதிகாரிகள் நியாயமாக அனைத்து இடங்களிலும் தமது கடமைகளை செய்கின்றனர். கொழும்பில் ஒன்றையும் டட்லி சிறிசேனவின் முன்னால் ஒன்றையும் அதிகாரிகள் கூறியிருப்பார்கள் என நான் நம்பவில்லை.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எந்த பிளவுகளும் இல்லை எனவும் மைத்திரிபால சிறிசேனவை கடசியின் தலைவர் பதவியில் இருந்து நீக்க முயற்சித்து வருவதக பரவி வரும் வதந்தியில் உண்மையில்லை எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.