நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்
நேற்றைய தினம் மேலும் 52 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர்.
அவர்களுள் 49 பேர் குவைத் நாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய மூவரில் இருவர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் இந்தோனேசியாவில் இருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது