அறிகுறியே இல்லாமல் பிரபல பாலிவுட் நடிகரை தாக்கிய கொரோனா – மின்முரசு
பிரபல பாலிவுட் நடிகர் கிரண்குமாருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தி திரையுலகின் மூத்த நடிகரான கிரண்குமாருக்கு (வயது 72) கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் சில தினங்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருந்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மீண்டும் அவருக்கு பரிசோதனை செய்ய உள்ளனர்.
இதுகுறித்து கிரண்குமார் கூறும்போது, “எனக்கு நோய் அறிகுறி எதுவும் இல்லை. கடந்த 14-ந் தேதி வழக்கமான மருத்துவ சோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. எனவே எனக்கும் அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஆனால் காய்ச்சல், சளி எதுவும் இல்லை. தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். எனது குடும்பத்தினர் 2-வது மாடியிலும் நான் மூன்றாவது மாடியிலும் இருக்கிறோம்” என்றார்.
இவர் தேஷாப், சல்லுகி சாதி, பியர் கியா டு தர்னா கியா, பாபி ஜாசூஸ், பிரதர்ஸ், மோத், சாண்ட்விச், ஜூலி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே இந்தி பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமானார். ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ரா ஒன் ஆகிய படங்களை தயாரித்த கரீம் மோரானிக்கும் அவரது மகள்கள் ஷசா, ஜோயா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Source: Malai Malar
murugan
Post navigation
புற்றுநோய் பாதிப்பு…. 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சிகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்படாதா? #BBCRealityCheck
Related Posts

கள்ளக்காதலை ஊக்குவிப்பதா? – கவுதம் மேனன் குறும்படத்திற்கு எதிர்ப்பு
murugan May 26, 2020 0 comment

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சிகிச்சை: டிரம்ப் பயன்படுத்தும் தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிற செய்திகள்
Nila Raghuraman May 26, 2020 0 comment
