திருமலையில் விடாது மரக்களவு?
by டாம்போதிருகோணமலை – மஹதிவுல்வெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் விலைகூடிய மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதுகுறித்துப் பொலிஸார் அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர் எனத் தெரியவருகின்றது.
கந்தளாய் பிரதேசத்துக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் உள்ள முதிரை, கருங்காலி, தேக்கு போன்ற விலை கூடிய மரங்கள் வெட்டப்பட்டுள்ளன எனவும்,கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் வன இலாகா அதிகாரிகள் விடுமுறையில் சென்ற பின்னர் அதிகளவிலான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக மஹதிவுல்வெவ குளத்துக்குப் பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டுள்ளன எனவும், மீன் பிடிக்கச் செல்கின்றனர் எனக் கூறிச் சென்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் எனவும் குறித்த பிரதேசத்திலுள்ள சிலர் தெரிவித்தனர்.