கொத்தவால்சாவடி சந்தையில் கடைகளைத் திறக்க அனுமதி
by DINகொத்தவால்சாவடி சந்தையில் நிபந்தனைகளுடன் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையைப்போல, கரோனா பரவும் தளமாக அமைந்து விடக்கூடாது என்ற நோக்கில், கொத்தவால்சாவடி சந்தையில் கடைகள் மூடப்பட்டன. தற்போது சில நிபந்தனைகளுடன் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நாள் விட்டு, காலை 10.30 முதல் மாலை 6 மணி வரை கடைகளைத் திறக்கலாம். தரைத் தளத்தில் உள்ள கடைகளைத் திறக்கவே அனுமதி. குறிப்பாக கடைகளின் முன், நீலம், மஞ்சள் ஆகிய வண்ணங்கள் அடிக்க வேண்டும். நீல நிறம் அடிக்கப்பட்ட கடைகளை, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திறக்கலாம். இதே போல், மஞ்சள் நிறம் பயன்படுத்தப்பட்ட கடைகளை, செவ்வாய், வியாழன் என ஒரு நாள் விட்டு திறக்கலாம். கடைகளுக்கு வருவோருக்கும், பணிபுரிவோருக்கும் முகக் கவசம் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.