திருமண நிகழ்வினை ஏற்பாடு செய்பவர்களுக்கு விசேட ஆலோசனை!
by Vethu, Vethuஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
திருமண நிகழ்வு போன்று ஏனைய அனைத்து நிகழ்வுகளும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமையவே மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் திருமண நிகழ்வு நடத்தும் போது திருமண நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் குறித்து தீர்மானிப்பதே முக்கிய விடயமாகும்.
முன்னர் போன்று நண்பர்கள் உட்பட அனைவரையும் அழைத்து திருமண நிகழ்வுகளை மேற்கொள்ள முடியாது.
திருமண நிகழ்விற்கு குறைந்த பட்சம் நூறு மாத்திரமே கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொள்ளும் அனைவரும் முக கவசம் அணிதல் உட்பட சுகாதார நடைமுறைகளை அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.
அத்துடன் திருமணம் நிகழ்வு இடம்பெறும் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரியிடம் அதற்கான அனுமதியை பெறுவது கட்டயமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.