மரக்கறி வகைகளின் மொத்த விற்பனை விலைகளை கட்டுப்படுத்தும் பொறுப்பு பொலிஸாருக்கு?
by Kamel, Malaமரக்கறி வகைகளின் மொத்த விற்பனை விலைகளை கட்டுப்படுத்தும் பொறுப்பை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாள் தோறும் மரக்கறி வகைகளின் மொத்த விற்பனை விலை பற்றிய விபரங்களை சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்துறை தலைமையகம் அனுப்பி வைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரட்னவின் பணிப்புரைக்கு அமைய இவ்வாறு தகவல் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மெனிங், தம்புள்ள, வியன்கொட, மீகொட, கெப்படிபொல, நரஹேன்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலையிலும் மாலையிலும் திறக்கப்படும் பொருளாதார மத்திய நிலைங்கள் என்பனவற்றில் மரக்கறி வகைகளின் மொத்த விற்பனை விலை பற்றிய விபரங்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
இந்த விலைகளை ஒப்பீடு செய்து சரியான விலையில் மரக்கறி வகைகள் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதனை பொலிஸார் கண்காணிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான பணிப்புரைகளை பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரட்ன சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கியுள்ளார்.