நேற்று மட்டும் 154 பேர்: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 4000-ஐ கடந்தது – மின்முரசு
இந்தியாவில் கொரோனா வைரசால் 1.38 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4021 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவரின் உடலை பாதுகாப்புடன் அடக்கம் செய்யும் ஊழியர்கள்
இந்தியாவில் கொரோனா வைரசால் 1.38 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4021 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1,38,845 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 154 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4021 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57,721 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
Related Tags :
Source: Maalaimalar
murugan
Post navigation
நரகாசூரன் வரும்… ஆனா – கார்த்திக் நரேன் சூசகம்தமிழகம்-புதுவையில் ரம்ஜான் கொண்டாட்டம்- சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
Related Posts
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சிகிச்சை: டிரம்ப் பயன்படுத்தும் தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிற செய்திகள்
Nila Raghuraman May 26, 2020 0 comment
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு- மருத்துவ நிபுணர்களுடன் இன்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
murugan May 26, 2020 0 comment