
சொல்லிட்டாங்க...
ஊரடங்கு தளர்வால் இயல்புநிலைக்கு திரும்ப நினைக்கும் ஏழை, நடுத்தர மக்களுக்கு பொருளாதார நெருக்கடி பெரும் சுமையாக உருவெடுத்துள்ளது. - பாமக நிறுவனர் ராமதாஸ்
கொரோனா தொற்று காரணமாக மனித சமுதாயமே கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
மாத வட்டி தவணையை ஒத்திவைத்தது மக்களுக்கு முழு பலன் தர 6 மாதத்திற்கு பின் எக்காரணத்திற்காகவும் கூடுதல் தொகை வசூலிக்கக்கூடாது. - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
ஊரடங்கு முடக்கத்தால் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய பாக்கி-நிலுவை தொகைகளை மத்தியஅரசு அளித்தாலே பெரிய உதவியாக அமையும்.- தி.க. தலைவர் கி.வீரமணி