http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__292003810405732.jpg

பங்குச்சந்தை மட்டுமல்ல... ‘பங்கும்’ போச்சு டிவிடெண்டுக்கு கொரோனா வேட்டு கவலையில் மூழ்கிய முதலீட்டாளர்கள்

புதுடெல்லி:  பொருளாதார மந்தநிலை காரணமாக பங்குசந்தைகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. இதனால் பல லட்சம் கோடிகளை முதலீட்டாளர்கள் இழந்து விட்டனர். இந்த சூழ்நிலையில், நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், வங்கிகள் அதிக கடன் வழங்குவதை வகை செய்யும் நோக்கிலும் அவை டிவிடெண்ட் வழங்குவதை நிறுத்தி வைத்தது.  பங்கு முதலீட்டாளர்களுக்கு நிர்வாகங்கள் முன்பு 30 சதவீத டிவிடெண்ட் வழங்கி வந்தன. பின்னர் அதை 50 சதவீதமாக உயர்த்தின. இதுபோல் வங்கிகளும் டிவிடெண்ட் 22 சதவீதமாக உயர்த்தி இருந்தன. ஆனால், பங்குச்சந்தைகள் சரிந்ததால் நிறுவனங்கள் டிவிடெண்ட் வழங்க இயலவில்லை. ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் அவை, இனி மீளுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. டிவிடெண்டாவது கிடைக்கும் என்று நினைத்த வாடிக்கையாளர்கள்', நிறுவனங்களின் இந்த முடிவால் கவலை அடைந்துள்ளனர்.

 அதே நேரத்தில், தற்போது பங்குகள் விலை குறைவதால் சில முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர். இவர்களுக்கு பங்குச்சந்தை நிபுணர்கள் சிலர் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அவர்கள் கூறுகையில், “தற்போதைய சூழ்நிலையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது தான். இருப்பினும் குறைந்த விலையிலான பங்குகளில் முதலீடு செய்வது பலனளிக்கும். உதாரணமாக ஏற்கனவே ₹10 முக மதிப்பில் பங்குகளை வாங்கியிருந்தால், தற்போது ₹6 ஆக சரிந்துள்ள பங்குகளை வாங்கலாம். நிறுவனங்கள் விரிவாக்கம் செய்யவும், புதிய முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்பதை அறிந்தே முதலீட்டாளர்கள் செயல்பட வேண்டும்’’ என்றனர்.