https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2545444.jpg

அரசு ஊழலை பட்டியலிட தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம்

77

சென்னை :'அ.தி.மு.க., அரசின் ஊழல்களை, மாவட்ட வாரியாக பட்டியலிட, வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும்' என, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று நடந்தது.கட்சியின் துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட, அந்தியூர் செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அமைப்புச் செயலர், ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்ட போது, அவருக்கு இடைக்கால ஜாமின் கிடைக்க, நீதிமன்றத்தில் வாதாடிய, கட்சியின் சட்டத்துறையினருக்கும் வாழ்த்து கூறப்பட்டது.

பின், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* முதல்வர், துணை முதல்வர், உள்ளாட்சி துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் மீது, கொரோனா ஊழல் புகார் அளித்த, ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தது; கரூர் கலெக்டரை புகார் கொடுக்க வைத்து, அந்த மாவட்ட, தி.மு.க., செயலர் செந்தில் பாலாஜி மீது, வழக்குப் பதிவு செய்தது.

* கோவை மாநகர் மாவட்ட செயலர் கார்த்திக், விவசாய அணி அமைப்பாளர் எம்.எஸ்.ராமமூர்த்தி கைது; முதல்வரின் ஊழலை பதிவிட்டதற்காக, தி.மு.க., - ஐ.டி.,
அணியின், ஐந்து நிர்வாகிகள் கைது போன்றவை, அரசின் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகள். இதற்கு, கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

* அ.தி.மு.க., அரசின் ஊழல்களை, மாவட்ட வாரியாக பட்டியலிட, வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE