அமெரிக்காவில் படையெடுக்கும் லட்சக்கணக்கான பூச்சிகள் – மனிதர்களுக்கு ஆபத்தா? மற்றும் பிற செய்திகள் – மின்முரசு

பெரும்பாலும் மண்ணுக்கு அடியில் வாழும் சில்வண்டு வகை ஒன்று 17 ஆண்டுகளுக்கு மீண்டும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடைக்காலத்தின் தொடக்கத்தில் விரிஜீனியாவின் தென் மேற்கு பகுதி, கலிஃபோரினியாவின் வடக்கு பகுதி மற்றும் மேற்கு விர்ஜீனியாவில் இந்த பூச்சிகள் மீண்டும் தோன்றலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்பு இதே பகுதிகளில் 2003 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் இந்த பூச்சிகள் தோன்றின. அதில் சில பகுதிகளில் 2013ஆம் ஆண்டு இந்த பூச்சிகள் காணப்பட்டன.

ஒரு ஏக்கர் நிலத்தில் 1.5 மில்லியன் பூச்சிகள் வரை வரக்கூடும் என கூறப்படுகிறது.

நீண்டகாலம் வாழக்கூடிய பூச்சி வகைகளில் இதுவும் ஒன்று. இந்த பூச்சிகளால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை ஆனால் இந்த பூச்சிகள் பெரும் அளவில் ஒலி எழுப்பக்கூடியவை.

ஊரடங்கு முடியும் நேரத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

உங்களோடு வரிசையில் நிற்கும் ஒருவர் திடீரென தும்மினால், அது உங்களுக்கு எந்த அளவிற்கு ஆபத்தாக அமையும்? நீங்கள் உணவு விடுதிக்குப் போகலாமா? அரசின் பேருந்து அல்லது ரயில் சேவையை பயன்படுத்தலாமா?

உலக நாடுகள் பலவும், தற்போது ஊரடங்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத்தொடங்கியுள்ளன.

விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: ஊரடங்கு முடியும் நேரத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் புதிதாக 765 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் எட்டு நபர்கள் இறந்துள்ளனர் என்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க:சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது – அண்மைய தகவல்கள்

பாகிஸ்தான் விமான விபத்து: குவிந்திருக்கும் சடலங்கள், டி.என்.ஏ சோதனை, கைகடிகாரம் – என்ன நடக்கிறது அங்கே?

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் விமானம் வெள்ளிக்கிழமையன்று கராச்சியில் விபத்துக்குள்ளானதில் இறந்தவர்களில் 66 பேரின் உடல் இப்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீதமுள்ள இறந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண கைரேகை மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

விரிவாக படிக்க:பாகிஸ்தான் விமான விபத்து: உடை மற்றும் கடிகாரத்தினால் அண்ணனின் உடலை அடையாளம் கண்டேன்

காதல்,காமம், பாலியல் அத்துமீறல்: ஒரு செக்ஸ் தெரபிஸ்டின் அனுபவம்

பீட்டர் சேடிங்டன் மற்ற செக்ஸ் தெரபிஸ்ட்களைப் போல, தன் வாடிக்கையாளர்களிடம் பேசும் விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளக் கூடியவர், அவர்களைப் பற்றி வெளியில் பேசி நம்பகத்தன்மையை கெடுத்துக் கொள்ளாதவர். ஒரு தெரபிஸ்ட்டாக பல ஆண்டுகளாக இள வயதினருக்கு அவர் அளித்த சிகிச்சைகள் அடிப்படையில் அவருடைய வாடிக்கையாளர் பற்றிய கதைகள் உள்ளன.

மிகவும் அந்தரங்கமான ரகசியங்கள் பற்றி அவர்களுடன் நான் பேசுவேன். ஆனால், என்னைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அப்படி தான் இருக்க வேண்டும்.

விரிவாக படிக்க: காதல்,காமம், பாலியல் அத்துமீறல்: ஒரு செக்ஸ் தெரபிஸ்டின் அனுபவம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

https://secure.gravatar.com/avatar/af9a785e8601afc5802048becbd90750?s=100&d=mm&r=g

Nila Raghuraman

Post navigation

இரு மாதங்களுக்கு பிறகு சென்னையில் இருந்து டெல்லிக்கு உள்நாட்டு விமான சேவை தொடங்கியதுகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தோற்ற விவகாரத்தில் மவுனம் கலைத்த வுகான் வைராலஜி நிறுவனம்

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005260349522316_1_Lockdown-death-2._L_styvpf.jpg

ஊரடங்கு: மார்ச் 24 முதல் மே 24 வரை மொத்தம் 24 பேர் தற்கொலை – அதிர வைத்த ஒற்றை மாவட்டம்

murugan May 26, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005260456415796_1_Kashmir-1._L_styvpf.jpg

காலில் வளையம், மர்ம எண்கள்: ரகசிய தகவல்களை அனுப்பவா? பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த புறா

murugan May 26, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005260036554885_1_Lockdown2._L_styvpf.jpg

5 வயது சிறுவனின் அசாத்திய விமானப்பயணம்

murugan May 26, 2020 0 comment