நேற்று மட்டும் 154 பேர்: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 4000-ஐ கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரசால் 1.38 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4021 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1,38,845 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 154 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4021 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57,721 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
Related Tags :
Coronavirus | கொரோனா வைரஸ் | கொரோனா உயிரிழப்பு
கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...
கொரோனா அப்டேட் - உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தை நெருங்குகிறது
மே 25, 2020 06:05
ரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500-ஐ தாண்டியது
மே 25, 2020 04:05
பாகிஸ்தானில் ஒரே நாளில் 2164 பேருக்கு கொரோனா பாதிப்பு
மே 25, 2020 02:05
டெல்லியில் மேலும் 9 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு
மே 25, 2020 01:05
தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெறவேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு
மே 25, 2020 00:05