![https://img.maalaimalar.com/Articles/2020/May/202005251121186628_Tamil_News_Deputy-CM-OPS-admitted-private-hospital-in-chennai_SECVPF.gif https://img.maalaimalar.com/Articles/2020/May/202005251121186628_Tamil_News_Deputy-CM-OPS-admitted-private-hospital-in-chennai_SECVPF.gif](https://img.maalaimalar.com/Articles/2020/May/202005251121186628_Tamil_News_Deputy-CM-OPS-admitted-private-hospital-in-chennai_SECVPF.gif)
துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி
தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இது வழக்கமான பரிசோதனை என்றும், மருத்துவ பரிசோதனை முடிந்து இன்று மாலையே வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.