![https://img.maalaimalar.com/Articles/2020/May/202005251819083848_Tamil_News_Tamlil-nadu-today-508-news-Covid19-positive-cases_SECVPF.gif https://img.maalaimalar.com/Articles/2020/May/202005251819083848_Tamil_News_Tamlil-nadu-today-508-news-Covid19-positive-cases_SECVPF.gif](https://img.maalaimalar.com/Articles/2020/May/202005251819083848_Tamil_News_Tamlil-nadu-today-508-news-Covid19-positive-cases_SECVPF.gif)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 17,082
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே 1-ந்தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 765 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்தது.
இன்று 805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.