மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1541 ஆக அதிகரிப்பு
மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 541 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை:
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1541 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Coronavirus | Dharavi | கொரோனா வைரஸ் | தாராவி
கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...
ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது
மே 24, 2020 22:05
ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை - மாநில வாரியாக விவரம்
மே 24, 2020 15:05
3 ஆயிரத்து 800-ஐ கடந்த பலி எண்ணிக்கை - மாநில வாரியாக விவரம்
மே 24, 2020 15:05
கர்நாடகாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்
மே 24, 2020 12:05
இந்தியாவில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 700 பேருக்கு புதிதாக கொரோனா
மே 24, 2020 09:05